செய்திகள் :

`நீ பொட்டு வச்ச தங்கக்குடம்!' - `லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

post image

தனுஷ் தற்போது பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் ̀தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனை தாண்டி ̀இட்லி கடை' படத்திற்கான பணிகளையும் மற்றொரு பக்கம் கவனித்து வருகிறார். ̀இட்லி கடை' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு முன்பு அறிவித்திருந்தது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்

ஆனால், இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. படத்தின் உறுதியான ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என விகடனுக்கு அளித்தப் பேட்டியில் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருந்தார். இதனை தாண்டி தனுஷ் நடித்திருக்கும் ̀குபேரா' படமும் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இப்படியான லைன் அப்களை தன் கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ்.

மற்றொரு பக்கம் தனுஷை இயக்கப்போகும் இயக்குநர்கள் என பலரின் பெயர்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், அது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்த வரிசையில் தனுஷ் ̀லப்பர் பந்து' படத்தின் இயக்குநரான தமிழரசன் பச்சமுத்துவுடன் இணைந்து ஒரு படம் பண்ணுகிறார் எனப் பேசப்பட்டது. இத்திரைப்படத்தையும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

 Tamilarasan Pachamuthu
Tamilarasan Pachamuthu

தற்போது இந்தக் கூட்டணிக் குறித்து விகடனுக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உறுதிபடுத்தியிருக்கிறார். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை கூடிய விரைவில் தொடங்கவிருக்கிறார்களாம். அப்படம் பற்றி வெளியான தகவல்கள் உண்மை எனவும் படத்திற்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வருவதாகவும் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி?

மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் பெரியவர் ரவிக்கும் (பிருத்வி) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அதே சிக்கலைச்... மேலும் பார்க்க