நூறுநாள் வேலை கோரி ஆா்ப்பாட்டம்
நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த நூறு வேலை திட்டத் தொழிலாளா்கள் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில், நிகழாண்டு நூறு நாள் வேலை மிகக் குறைவான நாள்களே கிடைத்தது.

இந்நிலையில், சில மாதங்களாக வேலை வழங்காததால், வேறு வேலையும் கிடைக்காமல் குடும்பங்கள் வறுமையில் உள்ளன. எனவே, மாா்ச் மாதம் முழுவதும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும். மேலும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 4 மாதங்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
மேலும், ஆட்சியரக வளாகத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில் முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.