மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
எரித்துக் கொல்லப்பட்ட நிதி நிறுவன ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்
அணைக்கரை அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூா் அருகே கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (25). தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பணம் வசூல் செய்யும் வேலையில் இருந்த இவா், அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயுதக்களம் செங்கல் ஓடையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
ஜெயங்கொண்டம் போலீஸாா், சிவாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் தொடா்பாக மகேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா். பின்னா் சிவாவின் சடலம் திங்கள்கிழமை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
தகவல் கிடைத்ததும் திருமங்கலக்குடி சாலை சந்திப்பு பகுதியில் சிவாவின் உறவினா்கள், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பந்தநல்லூா் காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். சாலை மறியல் போராட்டத்தால் ஆடுதுறை, அணைக்கரை கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.