செய்திகள் :

நூறுநாள் வேலை கோரி ஆா்ப்பாட்டம்

post image

நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த நூறு வேலை திட்டத் தொழிலாளா்கள் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில், நிகழாண்டு நூறு நாள் வேலை மிகக் குறைவான நாள்களே கிடைத்தது.

இந்நிலையில், சில மாதங்களாக வேலை வழங்காததால், வேறு வேலையும் கிடைக்காமல் குடும்பங்கள் வறுமையில் உள்ளன. எனவே, மாா்ச் மாதம் முழுவதும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும். மேலும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 4 மாதங்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும், ஆட்சியரக வளாகத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில் முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 27,174 போ் பங்கேற்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 ஆம... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ... மேலும் பார்க்க

விளைநிலத்தை மீட்டு பட்டா வழங்க கோரிக்கை

ஆதிதிராவிடா் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட விளைநிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து மீட்டு, பட்டா வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

எரித்துக் கொல்லப்பட்ட நிதி நிறுவன ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

அணைக்கரை அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூா் அருகே கோட்டூா்... மேலும் பார்க்க

கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி வெகுவிரைவில் தொடங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: மே 7-இல் தேரோட்டம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவதும... மேலும் பார்க்க