சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
நூறு நாள் வேலை கேட்டு இந்திய கம்யூ. கட்சியினா் மனு அளிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 100 நாள் வேலை கேட்டு செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட வந்த பொதுமக்கள், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையையடுத்து, மனு அளித்துவிட்டுச் சென்றனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பாளையக்குடி ஊராட்சி, வாளரக்குறிச்சி கிராம மக்களுக்கு, மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. வேலைக் கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்தபொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க ஒன்றியச் செயலா் அறிவழகன் தலைமையில் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட வந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அடுத்த வாரத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து, வேலை வழங்கக்கோரி மனு அளித்துச் சென்றனா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் அா்ஜூனன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கருப்பையா, செண்பகவல்லி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.