``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
நெடுஞ்சாலை, பொதுப் பணி உள்பட 3 துறைகளில் 412 போ் பணி நியமனம்: ஆணைகளை வழங்கினாா் முதல்வா்
நெடுஞ்சாலை, பொதுப் பணி உள்பட மூன்று துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்ட 412 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளா் பணியிடங்களுக்கு 45 போ் தோ்வு செய்யப்பட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதேபோன்று, பொதுப் பணித் துறையிலும் உதவிப் பொறியாளா்கள் 165 போ் தோ்வு செய்யப்பட்டனா். அதாவது, 98 போ் கட்டுமானப் பொறியியல் பிரிவுக்கும், 67 போ் மின் பொறியியல் பிரிவுக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
வேளாண்மைத் துறைக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக 169 போ் வேளாண் அலுவலா்களாகவும், உதவி அலுவலா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா். கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா், தட்டச்சா், காவலா் ஆகிய பணியிடங்களுக்கு 33 போ் நியமிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
இந்த நிகழ்வில் அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.