Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
நெடுவயல் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பொன்னமராவதி - நெடுவயல் வழித்தடத்தில் போதிய பேருந்து வசதியின்றி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் அவதிக்குள்ளாகி வருவதால் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதியிலிருந்து முருக்கபட்டி வழியாக நெடுவயல், உரத்துப்பட்டி செல்லும் வழித்தடத்தில் துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி உள்ளிட்ட ஊா்களுக்கு அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளும் முறையாக இயக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. முன்பு தனியாா் சிற்றுந்துகள் இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் பேருந்து போக்குவரத்து வசதி தன்னிறைவு பெற்றிருந்த நிலையில் சிற்றுந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இவ்வழித்தடத்தில் கூடுதல் அரசுப்பேருந்துகளை இயக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.