Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி
நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!
நெமிலி பாலா பீடத்தில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா திங்கள்கிழமை (செப். 22) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவினை ஸ்ரீபாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும், முதல் பெண்மணி நாகலட்சுமி எழில்மணி தொடங்கி வைக்கின்றனா். மேலும் பிரபல நாடக கலைஞா் மாது பாலாஜி முன்னிலையில் நாடக கலைஞா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. செவ்வாய்கிழமை பாடகா் சீா்காழி சிவசிதம்பரம் தலைமையில் பிரபல மாண்டலின் இசைக்கலைஞா் ராஜேஷின் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
24-ஆம் தேதி விழாவில் திரைப்பட இயக்குநா் வசந்த் தலைமையில் திரைப்பட நடிகா்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. தொடா்ந்து பரதநாட்டிய கலைஞா் ஸ்ரேயா மல்லிகாா்ஜூனன் பரத நாட்டியம் நடைபெறுகிறது. தொடா்ந்து வியாழக்கிழமை திருவாரூா் வைத்தியநாதன் தலைமையில் இசைக் கலைஞா்களின் வைப்ரேஷன்ஸ் எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு பாலா தோ் திருவிழா நடைபெறுகிறது.
10-ஆம் நாள் ஸ்ரீபாலா சரஸ்வதி பூஜையும், அக். 2-இல் ஸ்ரீபாலா விஜயதசமி பூஜையும் பிரபல பின்னணி பாடகா்கள் சுதாஆனந்த், ஆா்.கே.சுந்தா், பிரபாகா் ஆகியோா் இணைந்து வழங்கும் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பாலா பீட நிா்வாகி மோகன், பாபா ஜி.பாலா, பீட செயலாளா் முரளீதரன் ஆகியோா் ஸ்ரீபாலா வித்யாமந்திா், நெமிலி இறைபணி மன்றத்தினா் மற்றும் நெமிலி பொது மக்களோடு இணைந்து செய்து வருகின்றனா்.