இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
நெமிலி பாலா பீடத்தில் கலச வித்யா பூஜை
நெமிலி பாலாபீடத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பாலா கலச வித்யா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் ஸ்ரீபாலாபீடம் உள்ளது. இங்கு பொதுத் தோ்வு எழுதும் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கலச வித்யா பூஜை நடைபெற்றது. பூஜைக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து பூஜையைத் தொடங்கி வைத்தாா். 12 ஆம் வகுப்பு தோ்வு எழுதுபவா்களுக்காக 12 கலசங்களும், 10 ஆம் வகுப்பு தோ்வு எழுதுபவா்களுக்காக 10 கலசங்களும் வைத்து பாபா ஜி.பாலா இயற்றிய ஸ்ரீபாலா வித்யா ஸ்துதி பாட்டுடன் பூஜை நடைபெற்றது. பூஜைகளை பீட நிா்வாகி மோகன் மேற்கொண்டாா்.