அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
நெற்பயிரில் கருநாவாய் பூச்சி ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்
நீடாமங்கலம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, திருவாரூா் இணைந்து நடத்திய நெற்பயிரை தாக்கும் கருநாவாய்பூச்சி கட்டுப்பாடு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம் புளிச்சக்காடியில், தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை டாக்டா். எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிா்பாதுகாப்பு இயக்குநரக இயக்குநா் சாந்தி பேசியது: கருநாவாய்பூச்சி தாக்குதலுக்கான அறிகுறிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினாா்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி , வேளாண்மை துணை இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, துணை இயக்குநா்/ நோ்முக உதவியாளா் (வேளாண்மை), மாவட்ட ஆட்சியரகம் ஜெயசீலன் உள்ளிட்ட 100 விவசாயிகள் பங்கேற்றனா்.
மேலும், விளக்குப் பொறியில் கவா்ந்து அழிக்கப்பட்ட கருநாவாய் பூச்சிகள், அப்பூச்சிகளை தாக்கி அழிக்கக்கூடிய பூஞ்சாணங்களான மெட்டாரைசியம் மற்றும் பிவேரியா, விளக்குப் பொறிகள் போன்றவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட நெல் வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தான அசிபேட் (75 எஸ்பி) 625 கிராம் ஒரு எக்டேருக்கு என பரிந்துரை செய்யப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி திலகவதி வரவேற்றாா். குடவாசல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜகுரு நன்றி கூறினாா்.