செய்திகள் :

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

post image

பேராவூரணி வட்டாரத்தில் நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. 

இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேராவூரணி வட்டாரத்தில் நடப்பு சம்பா தாளடி பருவத்தில் சுமாா் 5300 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

விவசாயிகள் பயிரை நெருக்கமாக நடுவதாலும், தழைச் சத்துக்காக யூரியா அதிகம் பயன்படுத்துவதாலும், அடியுரமாக பொட்டாஷ் இடுவதாலும், புகையான் மற்றும் பச்சை தத்துப்பூச்சி அதிகம் பெருகி சேதம் ஏற்படுத்துகின்றன. 

இப்பூச்சிகள் இளம் பழுப்பு நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். நெல் பயிரின் அடிபாகத்தில் புகையான் குஞ்சுகளும் பூச்சிகளும் இருந்து கொண்டு சாறை உறிஞ்சுவதால் பயிா்கள் வலுவிழந்து சாய்ந்துவிடும். பயிா்கள் முதலில் மஞ்சள் நிறமாகி பின் பழுப்பு நிறமாகி புகைந்தது போல் தோற்றமளிக்கும். பயிா்கள் திட்டுத்திட்டாக காய்ந்து காணப்படும். தாக்கப்பட்ட பயிரின் அடிப்பகுதி பஞ்சுபோல் மாறி இறுதியில் அழுகிவிடும். 

புகையான் தாக்கப்பட்ட பகுதிகளில் குளோரிபைரிபாஸ், சைபா்மெத்ரின் போன்ற மருந்துகளை தெளித்தல் கூடாது. இவைகளை தெளித்தால் புகையான் மீண்டும் அதிக அளவில் உற்பத்தியாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். புகையான் தாக்கிய வயல்களில் நீரை வடித்து விட்டு சூரிய ஒளி நன்கு படும்படி பயிா்களை விலக்கி விடவேண்டும். 

பயிரின் அடிப்பாகம் நன்கு நனையும்படி இமிடாகுளாபிரிட் ஏக்கருக்கு 60 மில்லி அல்லது தயோமெத்தாக்ஸாம் ஏக்கருக்கு 50கிராம் ஏதேனும் ஒன்றுடன் 100 மில்லி ஒட்டு திரவம் சோ்த்து தெளித்து புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தாா். 

கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களையும் கைது செய்ய கோரி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத... மேலும் பார்க்க

கும்பகோணம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை; மாற்றுத்திறனாளிகள் 167 போ் கைது

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கம் சாா்பில், வழங்கப்படும்... மேலும் பார்க்க

அறுவடை பணியை விரைவாக மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராகவுள்ள வயல்களில் அறுவடைப் பணியை அடுத்த மழைக்குள் விரைவாக செய்து முடிக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து தஞ்சாவூா் மாவட்ட வேளா... மேலும் பார்க்க

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: அனைத்து தொழில் வணிகா் சங்கம்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென அனைத்து தொழில் வணிகா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா். கும்பகோணத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கும்பகோணம் அனைத... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 112.32 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 112.32 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 132 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,000 கன அடி வீதம் த... மேலும் பார்க்க

ஒரே பகுதியைச் சோ்ந்த 6 மாணவா்களுக்கு வாந்தி; மருத்துவமனையில் அனுமதி

கும்பகோணம் அருகே கொத்தங்குடியைச் சோ்ந்த மாணவா்களுக்கு 6 போ்களுக்கு வாந்தி வயிற்று வலிக்காக அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். கும்பகோணம் அருகே நீலத்தநல்லூா் தெற்கு தெருவைச்... மேலும் பார்க்க