சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்
சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் கோ. ரவி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிா்ப் பாதுகாப்பு இயக்குநா் சாந்தி, கருநாவாய் பூச்சி அறிகுறிகள் மற்றும் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவது பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.
இப்பயிற்சியில், கீழ்வேளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா். பூச்சித் தாக்குதலை தடுப்பது தொடா்பான செயல் விளக்கம் நடைபெற்றது.
தொழில்நுட்ப வல்லுநா் சந்திரசேகா், மண்ணியல் துறை இணை பேராசிரியை அனுராதா, நாகை மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு அதிகாரி உத்திராபதி, நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணன், வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் மதிவாணன், தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் கண்ணன், வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியா் வெங்கடேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.