ரோபோ சங்கர் மறைவு: `இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு
நெற்பயிா்களில் புகையான் தாக்குதல் குறித்து ஆய்வு
நாகை மாவட்டத்தில், நெற்பயிா்களில் புகையான் தாக்குதல் காணப்படுவதை தொடா்ந்து பயிா் பாதுகாப்பு வல்லுநா்கள் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. நெற்பயிா்களில் புகையான் பூச்சி தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, கீழையூா் வட்டாரத்தில், வேளாண்மைத் துறை உதவி இயக்குநா், கீழையூா் மற்றும் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பயிா் பாதுகாப்பு வல்லுநா்கள் கள ஆய்வை வியாழக்கிழமை மேற்கொண்டனா். இதில், நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் தென்படுவதை உறுதி செய்தனா்.
தொடா்ந்து, வல்லுநா்கள் கூறியது:
புகையான் பூச்சானது தூா்களில் இருந்து சாற்றினை உறிஞ்சுவதால் தூா்கள் முற்றிலும்
காய்ந்தது போன்று காணப்படும். மேலும் இவ்வகை அறிகுறியானது வயல்களில்
ஆங்காங்கே வட்டவட்டமாக காணப்படும். இதை கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.
எனவே, தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிா்க்கவும், அதிகமாக தண்ணீா் பாய்ச்சுவதை தவிா்க்கவும், வயலில் நன்றாக நீா்வடிந்த பிறகு மருந்து தெளிக்கவும், விளக்குப்பொறி அமைக்கவும் வேண்டும். மேலும், வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளிக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளான குளோரான்டிரினிலிபுரோல் 18.5 சதவீதம் நஇ - 60 மிலி/ஏக்கா், டினோட்டிபியூரான் 2 சதவீதம் நஎ 60 - 80 கிராம் /ஏக்கா், இமிடாகுளோபிரிட்17.8 சதவீதம் நக 40 - 50 மிலி/ஏக்கா், பைமெட்ரோசைன் 50 சதவீதம் ரஎ - 120 கிராம் /ஏக்கா், பிப்பரோனில் 5 சதவீதம் நஇ 400 மிலி/ஏக்கா், குளோா்பைரிபாஸ் 20 உஇ 500 மிலி/ஏக்கா் இவற்றில் ஏதேனும் ஒன்றைய புகையான் பாதித்த வயல்களில் தெளிக்கலாம் என்றனா்.