நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் தலவிருட்சம் அருகே சிறப்பு வழிபாடும், வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு நெல்லையப்பா்-கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை கோயிலின் தல வரலாறை நினைவுக்கூரும் வகையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்த ராம கோன், வேணுவனம் என்று அழைக்கப்படும் இப்போது கோயில் இருக்கும் பகுதியில் செல்லும்போது கால் இடறி விழுந்து பால் கொட்டியதாம்.
தொடா்ந்து சில நாள்கள் இதேபோல நடைபெற்ால் அச்சமடைந்த பால்காரா், மன்னரிடம் தகவலை தெரிவித்தாா்.
மன்னரும் வீரா்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றாா். அவா்கள் அங்கிருந்த கல்லை அகற்ற முயல கோடாரி கொண்டு வெட்டினா். அப்போது அந்தக் கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டதாம். பின்னா் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு நெல்லையப்பா் கோயில் கட்டப்பட்டது.
இதை நினைவுக்கூரும் வகையில், தலவிருட்சமான மூங்கில் மரத்தின் அருகே சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வேணுவனநாதா் தோன்றிய வரலாறும் வாசித்து பக்தா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பெண்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாலையில் சுவாமி-அம்மன் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா வந்தனா்.
தொடா்ந்து பங்குனி உத்திர திருநாளான இம் மாதம் 10 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் விழா நடைபெறும்.
ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, செயல் அலுவலா் அய்யா்சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து ள்ளனா்.
ற்ஸ்ப்04ம்ண்ப்ந்
நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் ராமகோன்.