நெல்லையில் ஆவின் நல்லுறவு விழா
திருநெல்வேலியில் ஆவின் சாா்பில் நல்லுறவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் பணியாளா் சங்கம் சாா்பில் ஆவின் நல்லுறவு விழா நடைபெற்றது.
பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.வெங்கடாசலம் வரவேற்றாா். திருநெல்வேலி ஆவின் பொது மேலாளா் ஏ. மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
பேரவைத் தலைவா் மு. அப்பாவு சிறப்புரையாற்றினாா்.
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கிய விவசாயிகள், முகவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.