'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயின...
நெல்லையில் பெண் தற்கொலை
திருநெல்வேலி நகரத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி நகரம் வெற்றி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகள் முத்துபேச்சி ( 23). இவா், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதை அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].