கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
நெல்லை: மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் மரணம்!
திருநெல்வேலி: முக்கூடலில் மகன் இறந்த துக்கம் தாங்காமல், வீட்டுக்குச் சடலம் வருவதற்குள் அவரது தாயாரும் மரணமடைந்தார்.
நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி கலைமணி. இவர்களுடைய 4 -வது மகன் சுரேஷ், பொங்கல் விடுமுறைக்கு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை திடீரென மாரடைப்பால் சுரேஷ் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இறுதிச் சடங்கு செய்வதற்காக முக்கூடல் கொண்டு வந்தனர்.
ஆனால், சுரேஷின் உடல் வருவதற்குள் தாயார் கலைமணி செவ்வாய்க்கிழமை அதிகாலை மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு ஒரே இறுதி ஊர்தி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மகன் இறந்த துக்கத்தில் தாயும் இறந்த சம்பவம் முக்கூடல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.