நெல்லை வந்தே பாரத் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் தொடக்கம்
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ள நிலையில், விரைவில் அதற்கான முன்பதிவு தொடங்கவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாள்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஜன.11-ஆம் தேதி முதல் 16 பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வந்தே பாரத் ரயிலின் இருக்கைகள் முழுவதும் நிரம்பி காணப்பட்டதையடுத்து, கூடுதலாக இணைக்கப்பட்ட பெட்டிகள் மூலம் கூடுதல் இருக்கைகள் நிரம்பவுள்ளன. இதனால் காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களுக்கு இருக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த 8 பெட்டிகளுக்கான பயணச்சீட்டு இதுவரை ஒதுக்கப்படவில்லை எனவும், விரைவில் முன்பதிவுக்கான இருக்கைகள் ஒதுக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.