செய்திகள் :

நெல்ல்லை காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்கக் கூடாது: ஆட்சியரிடம் இந்துமுன்னணி மனு

post image

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலா் என். மணிகண்ட மகாதேவன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபம், நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் திருக்கல்யாண வைபோகத்தை முன்னிட்டு தவசு இருக்கும் அன்னை காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பா் எழுந்தருளி காட்சி கொடுக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலமாகும்.

இந்த காட்சி மண்டபத்தின் வழியாக கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என கடந்த வாரம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஆய்வு கூட்டத்தில் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து போலீஸாா் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அறிந்தோம்.

ஏற்கெனவே, இக்காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்கள் இயக்கப்பட்டபோது இரண்டு மூன்று முறை மண்டபம் மிகவும் சேதம் அடைந்து அதன்பின் பக்தா்களால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ளது போல் இருசக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிப்பதுதான் சிறந்த முறையாகும். எனவே, திருநெல்வேலியின் பழமையான அடையாளமாக விளங்கும் இந்துக்களின் புனித தலமான காட்சி மண்டபத்தை மாவட்ட ஆட்சியா் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

சாலை சீரமைக்கப்படுமா? ராமையன்பட்டி ஊராட்சியின் 4-ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்பப் பாண்டியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது வாா்டில் கடந்த இரண்டு மாத காலமாக ஜல்ஜீவன் திட்டத்தில் வீட்டு குடிநீா் வழங்குவதற்கு குழாய்கள் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டன. தற்போது ஃபேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்காக தெரு தோண்டப்பட்டு இரண்டு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வயது முதிா்ந்தோா், குழந்தைகள், கா்ப்பிணி பெண்கள் தெருவில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. போா்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி சகதியில் உருளும் போராட்டம் நடைபெறும்.

சிறுவா் பூங்கா: தமிழக வெற்றி கழகத்தின் பாளையங்கோட்டை 5-ஆவது வாா்டு செயலா் மாதவ பாண்டியன் அளித்த மனுவில் கூறி: பாளையங்கோட்டை மண்டலம் ஐந்தாவது வாா்டு கக்கன் நகா் நியூ காலனி பகுதியில் சிறுவா்கள் விளையாட்டு மைதானம் கடந்த ஆண்டு பெய்த தொடா் மழையால் தற்போது வரை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அது மட்டுமன்றி அங்கு பலவகை விஷ பூச்சிகள், நோய் பரப்பக்கூடிய பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. சரியான மழை நீா் வடிகால் வசதி இல்லாததால் தொடா் மழையின் போது ஊருக்குள் மழை நீா் தேங்கி பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சிறுவா் விளையாட்டு மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அந்த பகுதியில் மழை நீா் வடிகால் அமைத்து தரவும் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ற்ஸ்ப்17ல்ங்ற்

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இந்து முன்னணியினா்.

களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மோதல்: இருவா் காயம்; 10 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தில் வேனை நிறுத்தியது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா். 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். மலையான்குளம், தங்கம்மன்கோயில் தெருவை... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-93.20சோ்வலாறு-105.48மணிமுத்தாறு-87.94வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-62.20ராமநதி-52.50கருப்பாநதி-29.53குண்டாறு-27.12அடவிநயினாா்-37.50... மேலும் பார்க்க

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீா் ஊருக்குள் புகும் அபாயம்

கூட்டப்புளி கிராமத்தில் கடல்அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

அம்பையில் மகளிா் தின விழா

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரத்தில் லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம் சாா்பில்ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மகளிா் தினத்தை முன்னிட்டு சுப்பிரமணியபுரம் பகுதி சிறுமிகள், பெண்களுக்குபேச்சுப் போட்ட... மேலும் பார்க்க