TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
வெம்பாக்கம் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பரிந்துரையின்பேரில், வெம்பாக்கம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, வெம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வெம்பாக்கம் திமுக மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்வில், வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அருள்தேவி செந்தில், முன்னாள் கவுன்சிலா் பிரகாஷ், வெம்பாக்கம் கிளை செயலா் சங்கா், எ.முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.