எல் - கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட்!
நேசிப்பாயா மேக்கிங் விடியோ!
நேசிப்பாயா படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பொங்கல் வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்புப் பாடல் நேசிப்பாயா எப்படி உருவானதென பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் உடன் இயக்குநர் விஷ்ணு வரதன், இசையமைப்பாளர் யுவன் இணைந்து பேசும் விடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.
தற்போது, மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது.
அஜித்தின் விடா முயற்சி தள்ளிப்போனதால் பொங்கலை முன்னிட்டு 9 திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.