செய்திகள் :

`நேர்மைக்கு பரிசு டிரான்ஸ்பர்' மாற்றப்பட்ட சிவகாசி `நகர் நல அலுவலர்' - பின்னணி என்ன?

post image

சிவகாசி மாநகராட்சி நகர் நல அலுவலரை மாநகராட்சி நிர்வாகத்துறை திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணியில் சிவகாசி மேயரின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சிவகாசி மாநகராட்சி நகர் நல அலுவலராக பணியாற்றி வந்தவர் சரோஜா. சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியை மேற்கொள்ள மதுரையை சேர்ந்த 'ராம் அண்ட் கோ' எனும் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.

இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சியில் முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்வதில்லை என மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜாவுக்கு தொடர் புகார்கள் வந்தது.

சிவகாசி மாநகராட்சி

இதையடுத்து மாநகராட்சி இடங்களில் ஆய்வு நடத்திய நகர்நல அலுவலர் சரோஜா, தூய்மை பணிகள் சரிவர மேற்கொள்ளபடாததை உறுதிசெய்தார். இதைத்தொடர்ந்து ஒப்பந்த நிறுவனமான ராம் அண்ட் கோ நிறுவனத்துக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரை செய்தார். தூய்மை பணிகளை, சரிவர மேற்கொள்ளும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

இந்தநிலையில், நகர் நல அலுவலர் சரோஜா திடீரென சிவகாசி மாநகராட்சியில் இருந்து பணியிட மாற்றம் செய்ததோடு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணியிட மாற்றத்தின் பின்னணியில் அதிகார அழுத்தமும், அரசியலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, நகர்நல அலுவலர் சரோஜாவை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, நிதி மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதன் பேரில் அரசியல் அழுத்தத்தின் காரணமாக மாநகராட்சி நிர்வாகத் துறை, நகர்நல அலுவலர் சரோஜாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மேயர் சங்கீதா, நகர்நல அலுவலர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பியதாக சொல்லப்படும் கடிதத்தின் நகல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் நகல்

அந்த கடிதத்தில், நகர்நல அலுவலர் சரோஜா சில பத்திரிகைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாநகராட்சிக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். ஆகவே அவரை பணியிடம் மாற்றம் செய்ய ஆவண செய்யவேண்டும்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, இதற்கு முன்பு திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரிந்தபோது ஒரு மாதத்தில் ரூ.55 லட்சத்திற்கு பினாயில் வாங்கியதாக அதிகாரிகள் செய்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார். அங்கு, மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தம் எடுத்த நிறுவனமும் இதே 'ராம் அண்ட் கோ' நிறுவனம் தான்.

`நேர்மைக்கு பரிசு டிரான்ஸ்பர்' மாற்றப்பட்ட சிவகாசி `நகர் நல அலுவலர்' - பின்னணி என்ன?
சிவகாசி நகர்நல அலுவலர் சரோஜா

இந்தநிலையில் அதிகாரி சரோஜா, அங்கிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பணியிடத்தில் நேர்மையாக செயல்பட்டதற்காக நகர் நல அலுவலர் சரோஜா, திருநெல்வேலியிலிருந்து, சிவகாசிக்கும் தற்போது சிவகாசியிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

US Tax Hike: நடுக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தை; `இப்படித்தான் நடக்கும்' - ட்ரம்ப் சொன்ன பதில்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்புகள் வால் ஸ்ட்ரீட்டை உலுக்கியுள்ளது. கோவிட் தொற்று பரவலுக்கு பிறகு உலக நிதி சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சியாகக் கருதுகின்றனர். இந்த வரிவி... மேலும் பார்க்க

WAQF Bill: கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன?

'இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா', 'இந்த மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது' - இப்படி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தும் நேற்று முன்தினம் மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மச... மேலும் பார்க்க

CPIM congress: ``மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் இரண்டு தீர்மானங்கள் இதுதான்'' - பிருந்தா காரத்

மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் முதல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா கார... மேலும் பார்க்க

CPIM congress: ``ஒன்றிய அரசால் அதிக பாதிப்படைவது நானும், கேரள முதல்வரும் தான்'' - முதல்வர் ஸ்டாலின்

"மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில்தான் இந்தியாவின் கூட்டாட்சி மலரும். இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ப... மேலும் பார்க்க

``கம்யூனிச இயக்கங்கள் பெரியார், அம்பேத்கர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்'' -சாலமன் பாப்பையா

"இல்லாத மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, உழைத்து கொடுக்கும் ஏழைகளுக்கு பாடுபடும் இயக்கஙகள் மலர்ச்சி பெற வேண்டும்." என்று பட்டிமன்ற நடுவரும், மூத்த தமிழறிஞருமான சாலமன் பாப்பையா பேசியுள்ளார்.நிகழ்ச்சியி... மேலும் பார்க்க