செய்திகள் :

நொய்டாவில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவர் கைது

post image

நொய்டாவில் மனைவியை சுத்தியலால் அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த நூருல்லா ஹைதர்(55). அவரது மனைவி அஸ்மா கான்(42). இந்த தம்பதிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். அஸ்மா கான் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரது கணவர் ஹைதர் சந்தேகித்துள்ளார்.

இதனால் இத்தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த ஹைதர் மனைவி தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அஸ்மா கான் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கே.எல்.ராகுல் அதிரடி: சிஎஸ்கேவுக்கு 184 ரன்கள் இலக்கு!

உடனே தம்பதியின் மகன் 112 என்ற எண்ணை தொடர்புகொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுக்கள் ஹைதரை கைது செய்தனர். பின்னர் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூராய்வு அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராம நவமி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் (ஏப்.6) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஒளிரும் நிகழ்வ... மேலும் பார்க்க

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா். விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அள... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்!

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்தை தொடா்ந்து ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினா் நிலங்களைக் குறிவைக்கும் பாஜக! -உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பெளத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

தேசியத் தலைவா் தோ்வுக்கு முன் மாநிலத் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம்!

புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்னதாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் கட்சித் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக அந்தக் கட... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: மணிப்பூா் பாஜக தலைவா் வீட்டுக்குத் தீவைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூா் பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டது. வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சமூக ஊடகத்தில் அஸ்க... மேலும் பார்க்க