``பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கிறேன்; எனக்கும்'' - திருநங்கை புகாருக்கு நாஞ்சில் விஜயன் விளக்கம்
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை வைஷுலிசா பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதில், "கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயன் என்னுடன் தொடர்பிலிருந்தார். ஆனால் சிறிது நாட்களாக என்னுடன் பழகுவதைத் தவிர்த்து வருகிறார்.
என்னை மனதளவில் புண்படுத்தி விட்டார். மாத்திரைகள் கூட எடுத்துக் கொண்டிருக்கிறேன். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார்.

மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் திருநங்கை என்பதால் என்னைத் தவிர்க்கிறார்" என்று நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் நாஞ்சில் விஜயன் இது தொடர்பாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "வாழ்வில் நல்ல பெயர் வாங்குவதே பெரிய விஷயம். என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே ஒரு சர்ச்சை விவகாரத்தில் சிக்கி நான் இப்போதுதான் மீண்டு வந்தேன். என் மீது நிறைய புகார்களை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள்
என்னுடன் 11 வருடங்களாக நீங்கள் வாழ்ந்ததாகத் தெரிவித்தீர்கள். அப்படி நான் உங்களுடன் இருந்திருந்தால் உங்கள் வீட்டு உரிமையாளரிடம் கேட்போம், அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது.
நான் உங்களைக் காதலித்ததாகச் சொன்னீர்கள், இப்படி மனசாட்சி இல்லாமல் பேசுகிறீர்கள், நான் உங்களைச் சகோதரியாக மட்டுமே பார்த்துப் பழகினேன்.
என்னுடன் நன்றாகப் பழகிவிட்டு என்னைக் காதலிப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை என்று நான் தெரிவித்துவிட்டேன். தற்போது திருமணத்திற்குப் பிறகும் எனக்கு இரவு நேரத்தில் போன் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதனாலேயே நான் அவரை எல்லா தளங்களிலும் பிளாக் செய்துவிட்டேன்.
நான்தான் குழந்தைக்காக மரியாவை திருமணம் செய்துவைத்தேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரிடம் நான் 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கினேன் என்று சொல்கிறீர்கள், உங்களிடம் ஆதாரம் இருந்தால் என்னிடம் கொடுங்கள். என்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தால் என் நண்பர்கள் மூலமாக பேச முயற்சி செய்திருக்கலாமே.
என் குடும்பத்தினர் அனைவரும் தொடர்பு கொண்டு மிகவும் அசிங்கமாக உள்ளது என்று சொல்கிறார்கள், எதற்காக இப்படி நீங்கள் செய்ய நினைக்கிறீர்கள்?
திருநங்கை என்பதால் மட்டும் நான் உங்களை ஒதுக்கவில்லை. எனக்கு நிறைய திருநங்கை நண்பர்கள் இருக்கிறார்கள். என் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறீர்கள், அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

யூடியூப் தம்ப்நெயில்களைப் பார்க்கும்போது மிகவும் அருவருப்பாக உள்ளது. தயவுசெய்து நியாயத்தைத் தெரிந்துகொண்டு பேசுங்கள். எனக்கு உங்கள் மீது நிறைய மரியாதை உள்ளது.
உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள். எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன. ஒருவேளை நான் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...