அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது!
வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(ஜன. 21) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,261.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 859.34 புள்ளிகள் குறைந்து 76,214.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214.85 புள்ளிகள் குறைந்து 23,129.90 புள்ளிகளில் உள்ளது.
நேற்று பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அப்போலோ, அல்ட்ராடெக் சிமென்ட், பிபிசிஎல், டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.
ஐசிஐசிஐ, ட்ரெண்ட், அதானி போர்ட்ஸ், எம்&எம், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.