பங்குச்சந்தை நிலவரம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!
நேற்று பங்குச்சந்தை சரிவடைந்த நிலையில் இன்று(பிப். 4) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,687.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.44 மணியளவில், சென்செக்ஸ் 611.50 புள்ளிகள் அதிகரித்து 77,798.24 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 179.70 புள்ளிகள் உயர்ந்து 23,540.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சீனா, ,மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பால் நேற்று(பிப். 3) பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.