Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெ...
பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!
சேமிப்புத் திட்டங்கள், பங்குச்சந்தை முதலீடு என்று கூறி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கிலான மதிப்பில் நிதி சார்ந்த மோசடிகள் நடக்கின்றன.
பணத்தை சேமிக்க வேண்டும், சேமித்து வைத்திருக்கும் பணத்தை பல மடங்காக பெருக்க வேண்டும் என்ற ஆசை பொதுவாகவே அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் இந்த ஆசையால் பலரும் தவறான வழிகளில் சென்று சேமித்து வைத்திருக்கும் பணத்தையும் இழந்துவிடுகின்றனர்.
நிதி சார்ந்த மோசடிகள்!
நிதி சார்ந்த மோசடிகளில் பல வகைகள் இருக்கின்றன.
டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு மோசடி, இ-வாலட் மோசடி, ஆன்லைன் தளங்கள் வழியாக மோசடி, வங்கிக்கணக்கை ஹேக் செய்து பணத்தை அபகரித்தல் என இதன் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
அதில் குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு, சேமிப்புத் திட்டங்கள் என்று கூறி மிகவும் மோசமான முறையில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பண மோசடி நடப்பது இந்த முறையில்தான்.
பங்குச்சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி மக்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ளது மோசடி கும்பல்.
உங்களுடைய பணத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுவதுதான் பங்குச்சந்தை முதலீடு என்று கூறப்படுகிறது. பங்குச்சந்தையின் வர்த்தகப்போக்கைவைத்தே இதன் லாபம் இருக்கும் என்பதுதான் உண்மை.
"நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை பல மடங்காக பெருக்க வேண்டுமா?, ரூ. 10,000 இருந்தால் அதை 10 ஆண்டுகளில் 10 கோடியாக மாற்றலாம்! குறைந்த வருமானம்; அதிக லாபம் - 100% உத்தரவாதம்" - இதுபோன்ற விளம்பரங்கள் அதிகமாக வருகின்றன. இந்த விளம்பரங்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
மிகவும் குறைந்த பணத்திற்கு அதிக லாபம் என்று சொன்னாலே நீங்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.
போலி ஆன்லைன் முதலீடு இணையதளங்களைக் காட்டி இவ்வளவு வாடிக்கையாளர்கள் இவ்வளவு லாபம் பெற்றுள்ளனர் என்று காட்டி உங்களின் ஆசையைத் தூண்டுவார்கள்.
குறிப்பாக வாட்ஸ்ஆப் குழுக்களின் மூலமாகதான் மோசடி கும்பல் இந்த வேலையைச் செய்கிறது.
அதிலும் நீங்கள் விரைந்து முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், இந்தெந்த சலுகைகள் எல்லாம் கிடைக்கும் என்று உங்களை நம்ப வைப்பார்கள்.
Beware of IPO stock Trading scams!!
— Cyber Crime Wing - Tamil Nadu (@tncybercrimeoff) August 19, 2025
To Report Cyber Crimes-Dial 1930 or register at https://t.co/B5dVcu5jFb#tncybercrimewing#tncybercrimeoff#whatsappscam#cybersafetamilnadupic.twitter.com/egOZ6SodAU
இதர முதலீடு மோசடிகள்!
இதேபோல அந்நிய செலாவணி வர்த்தக மோசடிகள் தற்போது மிகவும் பரவலான ஆன்லைன் வர்த்தக மோசடிகளில் ஒன்றாகும்.
போன்சி திட்டங்கள்: ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கு லாபத்திலிருந்து பணம் வழங்காமல் புதிய முதலீட்டாளர்களின் பணத்தை வழங்கும் திட்டம். புதிய முதலீடுகள் குறையும்போது கண்டிப்பாக இது சரிவைச் சந்திக்கும். இதுவும் ஒருவகை மோசடி திட்டமாகும்.
இதேபோலவே திட்டத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் ஏற்கெனவே இருந்தவருக்கு ஒரு தொகை வழங்கப்படும் அல்லது குறிப்பிட்ட லாபம் கிடைக்கும். இதுவும் சரியானது அல்ல.
விலை குறைவான பங்குகளை வாங்கி தவறான தகவல்களை அளித்து விலை உயர்ந்ததும் அதை விற்றுவிடுகிறார்கள். இதுவும் சரியான போக்கு அல்ல.
வழங்கப்படும் ஒரு உன்னதமான மோசடி. புதிய முதலீடுகள் வறண்டு போகும்போது இந்தத் திட்டம் சரிந்துவிடும்.
நம்பமுடியாத அளவிற்கு உயர்ந்த, உத்தரவாதமான லாபத்திற்கு உறுதியளிக்கும் திட்டங்கள் நிச்சயமாக போலியானவையாக இருக்கலாம்.
ஒருவர் ஏதேனும் ஒரு மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடியும் நடக்கிறது. இதையும் நம்ப வேண்டாம்.
செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் முதலீடு செய்யவுள்ள நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை ஒருமுறை சரிபாருங்கள். நிறுவனத்தை ஆராய்வது அவசியமான ஒன்று.
தெரியாத வங்கிக் கணக்குகளில் ஒருபோதும் பணத்தைச் செலுத்த வேண்டாம்.
உரிமம் பெற்ற, போலி செபி/ஒழுங்குமுறை சான்றிதழ்கள் மற்றும் ஐடிகளைக் கண்டறிந்து உறுதி செய்யவும்.
வாட்ஸ்ஆப் / டெலிகிராமில் வரும் வர்த்தக குழுக்களை நம்ப வேண்டாம்.
பாதுகாப்பில்லாத முகவர்களுடன் பான், ஆதார் அல்லது வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம்.
பாதுகாப்பில்லாத லிங்க்குகளை ஒருபோதும் திறக்க வேண்டாம்.
முதலீடு செய்வதற்கு முன் உங்களுக்குத் தெரிந்த ஒரு நிதி ஆலோசகரை அணுகலாம். நீங்கள் முதலீடு செய்ய உள்ள நிறுவனத்தையும் அவரிடம் ஒருமுறை சரிபார்க்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள். அவசரப்பட்டு மொத்த பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். சிறிய லாபம் பெற்ற பின்னர் உங்களுங்கு நம்பிக்கை வந்தபிறகு அடுத்த முதலீட்டைச் செய்யுங்கள்.
உங்களது சேமிப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்பது பற்றி அந்த நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
இதர சேமிப்புத் திட்டங்களையும் ஒருமுறை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது.
ஒரு நிறுவனம், ஒரு சிறிய தொகையை பன்மடங்கு பெருக்கித் தருவதாகச் சொன்னாலே அது ஒரு மோசடியாக இருக்கலாம். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தொகை ஒருபோதும் மோசடி கும்பலிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.