செய்திகள் :

பசுக்கள் மீது தாக்குதல்! கொந்தளித்த பாஜக!

post image

பெங்களூருவில் பசுக்கள் தாக்கப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவில் கர்ணா கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த அவரது பசுக்களை, ஞாயிற்றுக்கிழமை பிகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சையத் நஸ்ரு மதுபோதையில் தாக்கியுள்ளார். சையத்தின் தாக்குதலால், பசுக்கள் ரத்தம் வழிந்த நிலையில் கத்தியதையடுத்து, கர்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, பசுக்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, சையத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சையத் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கர்ணாவின் பசுக்கள் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்னர். கால்நடை மருத்துவமனை கட்ட இந்துக்களுக்கு ஆங்கிலேயர்கள் தானமாக வழங்கிய சுமார் ரூ. 500 கோடி மதிப்புள்ள நிலத்தில், பள்ளி கட்ட முயன்று வரும் வக்ஃபு வாரியத்துடன் கர்நாடக அரசும் கைகோர்த்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க:ஜன.21,27 நெட் தேர்வு நடைபெறும் - யுஜிசி அறிவிப்பு

கர்நாடக அரசின் இந்தப் போக்கை எதிர்க்கும்வகையில் போராட்டமும் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கர்ணாவும், அவரது பசுக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட கர்ணாவின் பசுக்கள் தாக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சாலவாடி நாராயணசாமி, முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை, முன்னாள் துணை முதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது! -பிரதமர் மோடி

திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்க் கலாசாரத்தில் மிகவும் முன்னோடி புலவரும், உலகப் பொதுமறையான திருக்குறள் தந்தவரு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி ரூ.25 ஆயிரமாக அதிகரிப்பு

இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 5 ஆயிரம் ஆக இருந்த பரிசுத்தொகை தற்போது 5 மடங்கு உயர்த்தி ரூ. 25 ... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 3 போர்க்கப்பல்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீல்கிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர்க்கப்பல்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.இந்த மூன்று போர்க் கப்பல்களும் நாட்டின் ... மேலும் பார்க்க

1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ராகுல் பதிலடி!

இந்தியா 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தில்லியில் தீன் தயாள் உபாத்யா சாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்... மேலும் பார்க்க

புது தில்லியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்வார் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர... மேலும் பார்க்க

காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு: ராகுல், சோனியா பங்கேற்பு!

காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றனர்.காங்கிரஸ் கட்சியின் முதல் பிரிவினை 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து, அக்கட்சி தலைமை அலுவலகம் குறித்த பிரச்னை தொடர்ந்... மேலும் பார்க்க