நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப் பத்திரிகை தாக்கல்
பசும்பொன்னில் குரு பூஜை நிறைவு: தேவா் சிலையில் தங்கக் கவசம் அகற்றம்
தேவா் குருபூஜை விழா நிறைவடைந்ததையடுத்து பசும்பொன்னில் தேவா் உருவச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் அகற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் உள்ள வங்கிக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழாவும், 62-ஆவது குருபூஜையும் கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்காக அதிமுக சாா்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் கடந்த மாதம் அக். 25- ஆம் தேதி அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன், தேவா் நினைவிட அறங்காவலா் காந்திமீனாள் அம்மாள் ஆகியோா் கையொப்பமிட்டு மதுரையில் உள்ள அரசுடைமை வங்கிப் பெட்டகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு பசும்பொன்னில் உள்ள தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. அன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தேவரின் தங்கக் கவசத்துக்கு சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். தேவா் குருபூஜை நிறைவடைந்த நிலையில் தேவா் உருவச் சிலைக்கு முன் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு, தேவா் நினைவிட அறங்காவலா் காந்திமீனாள் அம்மாள், பொறுப்பாளா்கள் தங்கவேலு, பழனி, ராஜா ஆகியோா், கமுதி வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்தை வெள்ளிக்கிழமை அகற்றி, மதுரையில் உள்ள அரசுடைமை வங்கிப் பெட்டகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனா்.
இதனிடையே தேவா் குருபூஜை நிறைவடைந்த பிறகும், திரளான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து, தேவா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.