பசு கடத்தல்: காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம்!
ஒடிசா மாநிலம் சம்பால்பூர் மாவட்டத்தில் பசு கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பால்பூரிலிருந்து மேற்கு வங்கத்திற்கு இன்று (மார்ச் 11) காலை பசுக்களை ஏற்றி சென்ற வாகனத்தை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தின் பாதுகாப்பிற்காக அதனை பின் தொடர்ந்து வந்த மற்றொரு வாகனத்திலிருந்த நபர்கள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கேரளத்தில் கஞ்சா வைத்திருந்த 378 பேர் அதிரடி கைது!
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் கட்டுப்பாட்டில் புர்லாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.