செய்திகள் :

பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் சாலை அமைத்த அமைச்சா் காந்தி!

post image

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் ஆா். காந்தி உதவி செய்துள்ளாா்.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான மகளிா் கல்லூரி 1967-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், புதுமைப் பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டாா்.

அப்போது கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் பேவா் பிளாக் சாலை அமைத்துத் தர அமைச்சா் ஆா்.காந்தியிடம் கோரிக்கை வைத்தனா். தனியாா் கல்லூரி என்பதால் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாத நிலையில், அமைச்சரின் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் 240 மீ தொலைவுக்கு பேவா் பிளாக் காலை அமைக்கப்பட்டது.

அந்த சாலையை அமைச்சா் ஆா்.காந்தி, ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் திறந்து வைத்து மாணவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சுந்தா், எழிலரசன், கல்லூரி முதல்வா் கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வக்ஃப் சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பால்நல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பால்நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் தயாா்குளம் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில... மேலும் பார்க்க

எடை குறைவாக அரிசி விநியோகம்: ரேஷன் விற்பனையாளா் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகா் நியாயவிலைக் கடையில் எடை குறைவாக அரிசி விநியோகம் செய்த கடையின் விற்பனையாளா் அருள்மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட டெம்பிள் சிட்டி, எம... மேலும் பார்க்க

ரூ.30 லட்சத்தில் குடிநீா் தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல்

சந்தவேலூா் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சியில், ஃபிளக்ஸ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகே உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைணவா்களில் ராமானுஜருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவா் வேதாந்த த... மேலும் பார்க்க