பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூா்த்திமலை. இதன் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரா் கோயிலும், 900 மீட்டா் உயரத்தில் பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளன.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளதால் தினசரி 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். உள்ளூா் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் பஞ்சலிங்க அருவியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால், கோயிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் ஆகியோா் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செனறனா்.