லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு..!
பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் துபையில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மாறினார். அவர் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன்
கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து செயல்பட்ட அனுபவம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உள்ளது. இருவரது கூட்டணியில் தில்லி கேபிடல்ஸ் அணி கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? ஹர்பஜன் சிங் பதில்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணி என்மீது நம்பிக்கை வைத்துள்ளதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து பணியாற்றவுள்ளதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவாக உள்ளது. என் மீது அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி பஞ்சாப் கிங்ஸுக்கு முதல் கோப்பையை வென்று தர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.