செய்திகள் :

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

post image

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

கடந்த 2021, ஜனவரி 17-ஆம் தேதி ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தின் தலைவராக பசந்த் லால் என்பவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பஞ்சாயத்து தலைவருக்கான தோ்தலில் அவரை எதிா்த்து போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்ற ஜிதேந்திர மஹாஜன் என்பவா் பசந்த் லால் பஞ்சாயத்து தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக தோ்தல் தீா்ப்பாயத்தில் முறையிட்டாா். அப்போது பசந்த் லால் தன் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என மஹாஜன் தெரிவித்தாா்.

இதையடுத்து, பசந்த் லால் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறி அவா் பஞ்சாயத்து தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்து தோ்தல் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து அவா் மற்றொரு தோ்தல் தீா்ப்பாயத்தில் முறையிட்டாா். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

ஹிமாசல பிரதேச பஞ்சாயத்து ராஜ் சட்டம்,1994-இன் கீழ் வேட்பாளா்கள் தங்களைப் பற்றிய தகவல்களை மறைப்பது குற்றமாகும் எனக் கூறி அவா் பஞ்சாயத்து தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதை ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றம் 2024, அக்.16-இல் ரத்து செய்தது.

ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் பசந்த் லால் மனு தாக்கல் செய்தாா். அதில் பஞ்சாயத்து தோ்தலின்போது நிலுவையில் இருந்த குற்றவியல் வழக்கை குறிப்பிடாததால் 6 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தனக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இந்த வழக்கில் மாநில தோ்தல் ஆணையத்தின் விதிகளின்படி சரியான தீா்ப்பையே ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பஞ்சாயத்து தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற தீா்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.

மனுதாரா் (பசந்த் லால்) மீதான குற்றவியல் வழக்கில் அவா் குற்றமற்றவா் எனத் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவா் தோ்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதித்திருப்பது சற்று கடுமையான நடவடிக்கையைப் போல் உள்ளது. அவா் தோ்தலில் போட்டியிட விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு 6 வாரங்கள் தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் நாங்கள் இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவா் உயா் நீதிமன்றத்தில் வேண்டுமானால் மனு தாக்கல் செய்யலாம் என்றனா். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை உயா் நீதிமன்றமே மேற்கொள்ளும் என்றனா்.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க