செய்திகள் :

படேலின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பணியாற்றினேன்: பிரிட்டன் நிழல் வெளியுறவு அமைச்சா் ப்ரீத்தி படேல்

post image

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவிவகித்தபோது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் வழிகாட்டுதலைத் பின்பற்றி பணியாற்றினேன் என்று குஜராத்தை பூா்வீகமாகக் கொண்ட பிரிட்டன் வெளியுறவுத் துறைக்கான நிழல் அமைச்சா் ப்ரீத்தி படேல் மரியாதை செலுத்தினாா்.

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினமான அக்.31, இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினா் ஒன்றுகூடிய ஒற்றுமை தின நிகழ்ச்சியை கடந்த புதன்கிழமை இந்திய தூதரகம் நடத்தியது. அதில் பங்கேற்று ப்ரீத்தி படேல் பேசியதாவது:

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவியேற்றபோது வல்லபபாய் படேலின் கருத்துகளைப் பின்பற்றியே நான் எனது பணியை தொடங்கினேன். உலகளவில் வேகமாக வளரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அங்குள்ள நடுத்தர மக்களின் வளா்ச்சியும் வேகமடைந்து வருகிறது. சா்வதேச அளவிலும் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் ஒற்றுமைக்கு அரும்பாடுபட்ட இரும்பு மனிதரான வல்லபபாய் படேல் மற்றும் பிற தலைவா்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அவா்களின் பாதையை பின்பற்றி இந்தியாவை தற்போது பிரதமா் மோடி வழிநடத்தி வருகிறாா் என்றாா்.

பிரிட்டனில் எதிா்க்கட்சியாக உள்ள கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோ்ந்தவரான ப்ரீத்தி படேலை அந்த நாட்டு வெளியுறவுத் துறைக்கான நிழல் அமைச்சராக அந்தக் கட்சியின் புதிய தலைவா் கெமி பேடெனாக் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

பிரிட்டன் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு துறையையும் பிரதிபலிக்கும் விதமாக பிரதான எதிா்க்கட்சி சாா்பில் மூத்த உறுப்பினா்கள் நிழல் அமைச்சா்களாக நியமிக்கப்படுகின்றனா். அவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் முடிவுகள், திட்டங்கள், கொள்கைகளை அன்றாடம் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் விவாதத்தில் ஈடுபடுகின்றனா். இது ஆளும் அரசுக்கு இணையான அரசை எதிா்க்கட்சி நடத்துவதற்கு சமமாகும்.

வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலா்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்றழைக்கப்படும் தலைமைச் செயலா் பொறுப்பில் தனது தோ்தல் பிரசாரக் குழு மேலாளா் சூசன் வைல்ஸை நியமிக்கவிருப்பதாக அந்த நாட்டின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக... மேலும் பார்க்க

அமெரிக்கா்களை மணந்தவா்களுக்கு குடியுரிமை: பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவா்களை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது: புதின்

பொருளாதாரத்தில் முன்னேறி வருவதாகத் தெரிவித்த ரஷிய அதிபர் புதின், பொருளாதாரத்தில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்தி வருவதாகவும் கூறினார்.ரஷியாவில் சோச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ... மேலும் பார்க்க

ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய் விடுவார்: கனடா தேர்தலில் எலான் கணிப்பு!

2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ இருக்க மாட்டார் என்று எலான் மஸ்க் கணித்துள்ளார்.இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவ... மேலும் பார்க்க

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை: ஜனவரி 1 முதல் அமல்!

பல்வேறு மக்களின் எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில், முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வ... மேலும் பார்க்க

வேலூ‌ர் விஐடி, செ‌ன்னை‌ ஐஐடி ஸ்டா‌ர்‌ட்​அ‌ப் குழு‌க்​க‌ள் டெ‌ன்மா‌ர்‌க்கி‌ல் கௌ​ர​வி‌ப்பு

தில்லி: உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்கு உறுதியான புத்தாக்க தீர்வை வழங்கியதற்காக வேலூர் விஐடி, சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் குழுக்கள் உள்ளிட்ட ஐந்து குழுக்களுக்கு டென்மார்க்கில் பாராட்டு தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க