இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
படை தலைவன் வெளியீட்டுத் தேதி!
நடிகர் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதில் கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.
அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளால் நிறைந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படம் வருகிற மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.