டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
பட்ஜெட்டில் உலகைச் சுற்றலாம்: இந்தியர்களுக்கான மலிவான சர்வதேச சுற்றுலாத் தலங்கள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்திய சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் வெளிநாடுகளைக் கண்டு களிக்க நிறைய தேர்வுகள் உள்ளன.
விசா சலுகைகள், மலிவான தங்குமிடங்கள் மற்றும் உணவு விடுதிகள் என பட்ஜெட் பயணத்திற்கு உகந்த இடங்கள் நிறைய உள்ளன. மேலும், நம் நாட்டிற்கு அருகாமையில் உள்ள பல அழகிய நாடுகளும் இந்த பட்டியலில் அடக்கம்.
நாம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிடும் போது, அந்நாட்டில் நம் இந்திய ரூபாய் மதிப்பு எவ்வளவு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதே விமானப் பயணக் கட்டங்கள், எளிதான விசா நடைமுறைகள் மற்றும் இந்திய உணவுகள் கிடைக்கும் இடங்கள் என நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். இன்றைய காலகட்டத்தில் இது போன்ற தகவல்களை இணையத்தின் வாயிலாகத் தெரிந்துக் கொள்வது மிகவும் சுலபம்.

வெளிநாட்டு சுற்றுலாக் குறித்து கூகுளில் தேடிய போது சில நம்பகமான இணையத்தளப் பக்கங்களில் நான் சேகரித்த தகவல்களை `மை விகடன்’ வாயிலாக உங்களுடன் பகிர்கிறேன். மலிவான பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கட்டுரை உதவும்.
தாய்லாந்து: கடற்கரைகள், கலாச்சாரம் மற்றும் சாகசத்தின் சங்கமம்
என்ன ஸ்பெஷல்: தாய்லாந்து ஒரு "கலவை தேசம்"! பாங்காக்கின் பரபரப்பான தெருச் சந்தைகள், ஃபூகெட்டின் தங்க மணல் கடற்கரைகள், சியாங் மாயின் ஆன்மீகக் கோயில்கள் – எல்லாம் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
பட்ஜெட் : குறுகிய விமானப் பயணம், விசா-ஆன்-அரைவல் (Visa-on-Arrival) வசதி மற்றும் மலிவு விலையில் சாலையோர உணவு என சுற்றுலாப் பயணிகள் கொண்டாடும் இடம் இது.

இலங்கை: நமக்கு அருகாமையில் இருக்கும் ஓர் அற்புதம்
என்ன ஸ்பெஷல் : இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா இடம் இது. கலாச்சாரத்திலும் இயற்கையிலும் வளமான நாடு. தேயிலைத் தோட்டங்கள் முதல் கொழும்பின் துடிப்பான நகர வாழ்க்கை வரை அனைத்தையும் ரசிக்கலாம்.
பட்ஜெட்: குறைந்த விமானக் கட்டணம், விசா இல்லாத நுழைவு மற்றும் நமக்கு பழக்கமான உணவுகள் கிடைப்பது கூடுதல் சிறப்பு.
பூட்டான்: இமயமலையின் அமைதியான மடி
என்ன ஸ்பெஷல்: அமைதி விரும்பும் ஆன்மீகவாதிகளுக்கான சொர்க்க பூமி. உயரமான இமயமலைக் காட்சிகள், தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் புலி கூடு (Tiger's Nest) போன்ற பிரமிப்பூட்டும் மடாலயங்களை கண்டுகளிக்கலாம்.
பட்ஜெட் : இந்தியர்களுக்கு விசா தேவையில்லை! அமைதியை நாடும் பயணிகளுக்கு மலிவான விலையில் ஒரு பூரண அனுபவத்தைக் கொடுக்கும்.

வியட்நாம்: வரலாறு பேசும் எழில் கொஞ்சும் பூமி இது
என்ன ஸ்பெஷல்: அழகிய ஹால் லாங் விரிகுடாவின் சுண்ணாம்புக் கற்கள் (Limestone Karsts), ஹனோயின் பழங்கால வீதிகள் மற்றும் ஹோய் ஆன் நகரின் வரலாற்றுப் பாரம்பரியம் நம்மை ரசிக்க வைக்கும்.
பட்ஜெட் : இங்கே தங்குவதற்கான சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் செலவு சற்றே குறைவு. விசா-ஆன்-அரைவல் வசதி உள்ளது. சாலையோர உணவுகள் இங்கு பிரபலம். ஒரு சிக்கனமான சாகசப் பயணத்திற்கு இந்த நாட்டை தேர்வு செய்யலாம்.
உஸ்பெகிஸ்தான்: கட்டிடக்கலை அதிசயம்
என்ன ஸ்பெஷல்: இங்குஇருக்கும்பண்டைய பட்டுப்பாதை (Silk Road) வரலாற்று சிறப்பு மிக்கது. புகாரா, சமர்கண்ட், கிவா போன்ற நகரங்கள் வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்தப் பகுதி பட்டு உற்பத்திக்கும் பெயர் பெற்றது, வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் நாடு இது.
பட்ஜெட் : இந்தியர்களுக்கு விசா-ஆன்-அரைவல் வசதி உண்டு, நியாயமான விலையில் விடுதிகள் மற்றும் மலிவான உணவுகள் கிடைக்கும். ஒரு தனித்துவமான கலாச்சாரப் பயணமாக அமையும்.

ஜார்ஜியா: காகசஸ் மலைகளின் மர்மம்
ஜார்ஜியா என்பது கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே உள்ள காகசஸ் பகுதியில், கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு.
என்ன ஸ்பெஷல்: ஜார்ஜியாவின் காகசஸ் மலைத்தொடர், அதன் மர்மமான பள்ளத்தாக்குகள் மற்றும் அற்புதமான குகைகளுக்கு பெயர்பெற்றது. ஐரோப்பிய பாணி நகரங்களான திபிலிசியின் பழைய நகரமும், காகசஸ் மலைகளும் இயற்கை எழில் நிரம்பியவை. கருங்கடல் கடற்கரையும் இங்குண்டு.
பட்ஜெட் ப்ளஸ்: விசா-ஆன்-அரைவல் வசதி, மலிவான உள்ளூர் போக்குவரத்து மற்றும் அன்பான விருந்தோம்பல் இந்த பகுதியின் பிளஸ்.
இந்த நாடுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து, அந்த இடத்திற்கான முழுமையான பயணத் திட்டத்தை (Itinerary) உருவாக்கி விட்டு உங்கள் சுற்றுலாவைக் கொண்டாடுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



















