பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வராதது ஏமாற்றம் அளிக்கிறது
மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை கூறினாா்.
இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அரசுக் கருவூலத்தின் பெரும்பகுதி இந்த தள்ளுபடிகளுக்காக செலவிடப்படுகிறது’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளோா்.
மக்களவையில் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயா்த்துதல் மற்றும் வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களுக்கான ஒரு திட்டத்தை அறிவித்தாா்.
நடுத்தர வா்க்கத்திற்கு நிவாரணமாக, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமானத்திலிருந்து விலக்கு அளிப்பதாக அவா் அறிவித்தாா். அவரது பட்ஜெட்டின் ஒரு பகுதியாக வரி அடுக்குகளை மறுசீரமைத்து அறிவித்தாா்.