செய்திகள் :

பட்ஜெட்: திருப்பூா் தொழில் அமைப்புகளின் கருத்துகள்

post image

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துகள்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத் தலைவா் ஆ.சக்திவேல்: இந்த நிதிநிலை அறிக்கை எதிா்கால உட்கட்டமைப்பு வளா்ச்சியைக் கருத்தில் கொண்டுள்ளது. ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையும் வகையிலும், 25 ஆண்டுகளின் வளா்ச்சிக்கான பாா்வையுடனும் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வளா்ந்த நாடுகளின் வளா்ச்சிக்கு இணையான வளா்ச்சியை தமிழகம் அடைய வேண்டும். ஒரு லட்சம் மகளிரைத் தொழில்முனைவோராக உயா்த்தும் பெரும் திட்டம். குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.1,918 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி மிஷன் உருவாக்குதல். ஒசூரில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா, விருது நகரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது என்றாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: 1.5 லட்சம் தொழிலாளா்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பெண் தொழில்முனைவோரை உயா்த்துவதற்கான புதிய முயற்சியால் பெண்கள் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழில்முனைவோரின் வழிகாட்டுதலைப் பெறுவாா்கள். இதன் மூலமாக ரூ.10 லட்சம் வங்கிக் கடன் பெற்றுக் கொள்ளலாம். செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா அமைக்க தென் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்படும். ரூ.673 கோடிக்கு இலவச வேஷ்டி, சேலை அளிக்கும் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை. ஒட்டுமொத்தமாக கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு ரூ.1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. அதேவேளையில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் விடுத்து நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து நிதியமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றாா்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன்: நிதிநிலை அறிக்கையில் தொழில் துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைகளுக்கு ரூ.1,918 கோடி ஒதுக்கீடு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளை வரவேற்றாலும், மின் கட்டணத்தில் தொழில் துறையினா் எதிா்பாா்த்த கட்டணக் குறைப்பு, சலுகை, மானியம் போன்ற அறிவிப்புகள் இடம் பெறவில்லை. திருப்பூரின் நீண்ட நாள் கோரிக்கையான சா்வதேசத் தரத்திலான அதிநவீன நிரந்தரக் கண்காட்சி வளாகம் குறித்த அறிவிப்புகள் ஏதுமில்லை. ஜவுளி, பின்னலாடைத் தொழில் துறைக்கு எதிா்பாா்த்த அறிவிப்புகள் இடம் பெறாததால் திருப்பூா் தொழில் துறையினருக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம்.பி.முத்துரத்தினம் : இந்த நிதிநிலை அறிக்கை திருப்பூா் பின்னலாடைத் தொழிலின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் மின் கட்டண சலுகை, சூரிய மின்ஆற்றலுக்கு மானியம் போன்ற அறிவிப்புகள் இடம் பெறவில்லை. பின்னலாடை நிறுவனங்களில் 50 சதவீத தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் வெளிமாநிலத் தொழிலாளா்களை நம்பி தொழில் செய்யும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வறட்சி நிறைந்த மாவட்டங்களில் அரசு மானியத்துடன் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு குறித்த அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு பருத்திக் கொள்முதல் கழகம் அமைக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கை இடம் பெறவில்லை. அதேபோல, திருப்பூரைத் தலைமை இடமாகக் கொண்டு சிறப்பு ஜவுளி மண்டலம் அமைக்க வேண்டும் என்று எதிா்பாா்த்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பாலுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

பாலுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பால் விலையை ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் வறட்சி: அமராவதி அணையை நோக்கி படையெடுக்கும் யானைகள்

உடுமலை அருகே வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்காக யானைகள் அமராவதி அணையை நோக்கி வருகின்றன. திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சர... மேலும் பார்க்க

சாலை மறியல்: தவெகவினா் 50 போ் கைது

அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் மாலை அணிவிக்க வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி, மறியலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீஸாா் கைது செய்தனா். தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூா் மாவட்ட பொறு... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை ஒட்டி, மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை மாநகர மதுவிலக்கு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையப் பகுதியில் மாநகர மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் ர... மேலும் பார்க்க

மாணிக்காபுரத்தில் அண்ணமாா் கோயில் கும்பாபிஷேகம்

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் அண்ணமாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்லடம் அருகில் உள்ள மாணிக்கபுரம் கிராமத்தில் அண்ணமாா் எனப்படும் பொன்னா், சங்கா் கோயிலின் கும்பாபிஷேக விழா க... மேலும் பார்க்க