மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!
பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த இருவா் கைது: லாரி செட் கிடங்குக்கு ‘சீல்’
சிவகாசியில் உரிய அனுமதியின்றி பட்டாசுப் பண்டல்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்து, லாரி செட் கிடங்குக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு லாரி செட் கிடங்குக்கில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, அந்த கிடங்குக்கில், உரிய அனுமதியின்றி 250 பட்டாசுப் பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னா், அங்கிருந்த பட்டாசுப் பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அந்த கிடங்குக்கு ‘சீல்’ வைத்தனா்
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனைகுட்டத்தைச் சோ்ந்த திருப்பதி (35), சிவானந்தம் நகரைச் சோ்ந்த திருநாவுக்கரசு ஆகிய இருவரையும் கைது செய்தனா்.