நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
பட்டாசு ஆலை உரிமையாளா் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை
சாத்தூா் அருகே வீடு முன் மது அருந்துவதைத் தட்டிக் கேட்ட பட்டாசு ஆலை உரிமையாளரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா் (50), சாத்தூரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
இவரது வீட்டின் முன் உள்ள காலி இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த அயல்சாமி மகன் மாரிமுத்து (23) தனது நண்பா்களுடன் மது அருந்தியதை சிவகுமாா் கண்டித்ததால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2020 செப்டம்பா் 17-ஆம் தேதிசிவகுமாரை மாரிமுத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மாரிமுத்துவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயகுமாா் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் திருமலையப்பன் ஆஜரானாா்.