செய்திகள் :

பட்டாசு, மளிகைப் பொருள் தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை! - அமைச்சர்

post image

கூட்டுறவுத் துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் தகவல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (08.11.2024) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பண்டிகைகள் என்பது தமிழர்களுடைய வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாகும். அத்தகைய பண்டிகைகளை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, முதல்வரின் அறிவுரையின்படி, கூட்டுறவுத் துறையின் மூலம் 31.10.2024 அன்று நடைபெற்ற தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு விற்பனை மற்றும் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆகியவை நடைபெற்றது.

இதையும் படிக்க | 'சகோதரர் சீமான்'- பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை  28.10.2024 முதல் நடைபெற்றது.

இதில், பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய 'அதிரசம்-முறுக்கு காம்போ' என்ற விற்பனை தொகுப்பும் குறைந்த விலையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 20,000 தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின்  மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விற்பனையை ஏற்பாடு செய்த அலுவலர்களுக்கும், சிறப்பாக விற்பனை மேற்கொண்ட விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல, வரும் பொங்கல் திருநாளிலும் இதுபோன்ற சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்திடவும், சிறப்பாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவை சனிக்கிழமை (நவ.9) செயல்படவுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, வேலை நாளான நவ. 1-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு ச... மேலும் பார்க்க

சிறைக் காவலா்களை வீட்டு வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துகிறாா்களா? விசாரணை நடத்த உள்துறைச் செயலருக்கு உத்தரவு

சிறைத் துறை அதிகாரிகள், சிறைக் காவலா்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகிறாா்களா என விசாரணை நடத்தவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறும் உள்துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் மக்கள் ந... மேலும் பார்க்க

பாம்புக் கடி: அரசுக்கு தெரிவிப்பது இனி கட்டாயம்

பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளித்தால், அதுகுறித்த அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாம்புக் கட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்விக்கு ரூ.171 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.171 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தோ்வு இன்று தொடக்கம்

தொழில்நுட்பப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தோ்வு சனிக்கிழமை தொடங்குகிறது. இயந்திர பொறியாளா், சுருக்கெழுத்தா் உட்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ... மேலும் பார்க்க