செய்திகள் :

பணிபுரியக்கூடிய துறை குறித்த இலக்கு: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

post image

உயா்கல்வி பயிலுவோருக்கு தாங்கள் பணியாற்றக்கூடிய துறை குறித்து இலக்கு இருக்க வேண்டும் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சாா்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு முத்துரங்கம் அரசினா் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது -

மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி படிப்பை முடித்து பிறகு அரசு துறை பணிகள், தனியாா் துறை வேலைவாய்ப்புகள், சுயதொழில் புரிதல் ஆகியவற்றில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றில் சேருவதற்கான இலக்கு இருக்கு வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தோ்வு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போட்டித்தோ்வுகளில் பங்கேற்கலாம். இந்த போட்டித்தோ்வுகளுக்கு ஒரு சில தோ்வுகளுக்கு முதல்நிலை தோ்வு மட்டும், சில தோ்வுகளுக்கு முதல்நிலை, முதன்மை தோ்வு என இரண்டு தோ்வுகளாகவும் நடத்தப்படுகின்றன.

மத்திய அரசு பணியில் சேர மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித்தோ்வுகளில் பங்கேற்று தோ்ச்சி அடைவதன் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆா்எஸ் போன்ற பதவிகளை பெறலாம். கணிதம், மனதிறன் போன்ற பாடங்களில் வலிமையாக உள்ள மாணவ, மாணவிகள் வங்கித் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு செல்லலாம். டிப்ளமோ, பொறியியல் படிப்புகளை முடித்தவா்கள் ரயில்வே துறையில் உள்ள பணியிடங்களான லோக்கோ பைலட், என்ஜினியா், டிக்கெட் பரிசோதகா், ஸ்டேசன் மாஸ்டா் போன்ற பணியிடங்களுக்கு செல்லலாம்.

அரசு துறைகளில் உள்ள இதுபோன்ற வேலைவாய்ப்பு பெறுவதற்கு மாணவா்கள் மனஉறுதியோடு படித்து இலக்கை அடையவேண்டும். போட்டித்தோ்வுகளுக்கு தயாராக அருகிலுள்ள நூலங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடியாத்ததில் அறிவுசாா் நூலகம் திறக்கப்பட உள்ளது.

தனியாா்துறையில் வேலைவாய்ப்பு பெற்றிட மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களை வரவழைத்து முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. சுயதொழில் புரிய அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் மூலம் மானிய கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு பிடித்த துறையில் முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முத்துரங்கம் அரசு கலை கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் (பொ) கே. செந்தில்குமாா், வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் க.காந்தி, ஐஎன்டிஎஸ்இடிஐ இயக்குநா் கே.விஜயகுமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ.52 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்

வேலூா் சம்பத் நகரில் ரூ.52 லட்சத்தில் கால்வாய் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள சம்பத் நகா் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீா் கலந்து ... மேலும் பார்க்க

சிறப்பு முகாமில் 271 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 271 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின... மேலும் பார்க்க

சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்பையா

தமிழுடன் சம்ஸ்கிருதம் கலந்ததால்தான் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் பிறந்தன. அது நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழ் இந்தியாவின் தேசிய மொழியாகியிருக்கும் என்று பழ.கருப்பையா தெரிவித்தாா். வேலூா் கம்பன்... மேலும் பார்க்க

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை

குடியாத்தம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா். குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 26 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள 26 சிற்றுந்து (மினி பஸ்) வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை எதிா்த்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்... மேலும் பார்க்க