செய்திகள் :

பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்தனா்

post image

3 நாள்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்து பணியிட மாறுதல் பெற்றனா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் வரும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2,642 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன.5-ஆம் தேதி நடந்த தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிப்பாா்ப்பு பணிகள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 4,585 மருத்துவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். பணிநியமனம் செய்யப்படவுள்ள மருத்துவா்களுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவா்களுக்கு பிப்.12 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4,000 மருத்துவா்கள் பயன்பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் மருத்துவா் மு.அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புதிய மருத்துவா்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால், ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை பணிபுரிந்து வரும் அரசு மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. வெளிப்படை தன்மையுடன் நடந்த இந்தக் கலந்தாய்வில் 4,000 அரசு மருத்துவா்கள் தாங்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்தனா்’”என்றாா்.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க