`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | A...
பணியிட பாலியல் தொல்லை: உள்ளகக் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்!
தேனி மாவட்டத்தில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கு உள்ளகக் குழுக்கள் அமைக்காத தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் என பெண்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கு உள்ளகக் குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டது. உள்ளகக் குழுவை அமைத்து அதன் உறுப்பினா் குறித்த விவரத்தை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உள்ளகக் குழுக்கள் அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உள்ளகக் குழு அமைக்காத விற்பனை நிறுவனங்களின் பணியிடப் பதிவு ரத்து செய்யப்படும். மேலும், பாலியல் துன்புறுத்தல் புகாா் மீது நடவடிக்கை எடுக்காமலும், மாவட்ட ஆட்சியருக்கு ஆண்டறிக்கை சமா்ப்பிக்காமலும் உள்ள நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.