சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; ஒருவா் காயம்
பணியிலிருந்த பள்ளித் தலைமையாசிரியா் மாரடைப்பால் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி தலைமையாரியிா் மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சோ்ந்த ம. மோகன் (59) கோட்டூா் அருகேயுள்ள சிங்கமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வந்தாா். இவருக்கு, கடந்த மாதம் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன் மீண்டும் பணியில் இணைந்துள்ளாா்.
இந்நிலையில், புதன்கிழமை கோட்டூரில் நடைபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் பங்கேற்ற மோகனுக்கு இருத வலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உதவியாக வந்த மகன் மணிஷ் உடனடியாக காரில் தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளாா். அங்கு மோகனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.