செய்திகள் :

பண்ட் கேப்டன், சாய் சுதர்சன் துணைக் கேப்டன்; சர்பராஸ் எங்கே? BCCI வெளியிட்ட இந்திய `ஏ' அணி!

post image

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (அக்டோபர் 23) நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர் முடிந்ததும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது.

அதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 நான்கு நாள் போட்டிகளில் இந்தியா ஏ' அணி விளையாடவிருக்கிறது. இந்த நிலையில், அந்த 2 போட்டிகளுக்கான இந்தியா ஏ' அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

முதல் போட்டிக்கான அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), ஆயுஷ் மத்ரே, என். ஜக்தீசன், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அன்ஷுல் காம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரண்ஷ் ஜெயின்.

இரண்டாவது போட்டிக்கான அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்ததால் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியில் இடம்பெறாத ரிஷப் பண்ட், இந்த இரண்டு அணிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், தென்னாப்பிரிக்காவுக்கெதிரான தொடரில் அவர் கம்பேக் கொடுப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்து vs இந்தியா - ரிஷப் பண்ட்
ENG vs IND - Rishabh Pant

இது ஒரு பாசிட்டிவ் சம்பவமாக இருந்தாலும், பார்டர் கவாஸ்கர் மற்றும் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் பென்சில் அமர்வில் வைத்திரப்பட்டு, வெஸ்ட் இன்டீஸுக்கெதிரான டெஸ்ட் தொடரில் கழற்றப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன், இதில் ஒரு போட்டியில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால், தென்னாப்பிரிக்காவுக்கெதிரான தொடரில் அவரை சேர்ப்பார்களா, வழக்கம்போல் பெயருக்கு எடுத்து பென்சில் அமர்வில் வைப்பார்களா, அல்லது முழுமையாகக் கழற்றிவிடுவார்களா என்பது பற்றிய சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது.

Abhimanyu Easwaran - அபிமன்யு ஈஸ்வரன்
Abhimanyu Easwaran - அபிமன்யு ஈஸ்வரன்

ஆனால், அவருக்குப் பிறகு இங்கிலாந்துக்கெதிரான தொடரில் சேர்க்கப்பட்டு, அதே தொடரில் ஆடவைக்கப்பட்ட சாய் சுதர்சன் இந்த அணியில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என்பதைக் காட்டுகிறது.

அதேபோல், பார்டர் கவாஸ்கர் தொடரில் பென்சில் அமர்வில் வைக்கப்பட்டு, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கெதிரான டெஸ்ட் தொடர்களில் கழற்றப்பட்ட சர்பராஸ் கான் இந்த அணியில் சேர்க்கப்படாததால், அவரையும் தொடர்ந்து புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், முகமது ஷமியின் பெயரும் இப்பட்டியலில் இல்லை.

56 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்கும் சர்பராஸ் கான் 65 ஆவரேஜில், 16 சதங்களுடன் 4759 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்திய `ஏ' அணியைப் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Womens World Cup: மீதமிருக்கும் ஓர் இடம்; மோதும் 3 அணிகள் - இந்தியாவுக்கான வாய்ப்பு என்ன?

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் (செப்டம்பர் 30 - நவம்பர் 2) ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் லீக் சுற்று முடிவை நெருங்கிவிட்டது.தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடங்களில் இ... மேலும் பார்க்க

Smriti Mandhana: பலரின் ரோல் மாடல்; மாஸ் ஸ்டோரி ஆஃப் தி `குயின்'

மகளிர் கிரிக்கெட்டில் தற்போது உலக அளவில் பிரபலமான இந்திய வீராங்கனைகளின் பெயர்களைப் பட்டியலிடச் சொன்னால், பெரும்பாலானோர் சட்டென உச்சரிக்கும் பெயர் ஸ்மிருதி மந்தனா.ஆடவர் கிரிக்கெட்டில் கோலி எப்படி `கிங்... மேலும் பார்க்க

Ashwin: ஷமி- அகர்கர் பிரச்னை; இதுதான் காரணம்- அஷ்வின் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி தனது உடல் தகுதியை நிரூபித்த பிறகும் ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படவில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது... மேலும் பார்க்க

Starc: 176 கி.மீ வேகத்தில் பந்துவீசினாரா ஸ்டார்க்? - உண்மை என்ன?

'அதிவேக பந்து?'இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஓடிஐ போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கிரிக்கெட் உலகின் அதிவேக பந்தை வீசியதாக ... மேலும் பார்க்க

RoKo: சிக்கிய ரோஹித்; டக் அவுட் ஆன கோலி - ரசிகர்கள் ஏமாற்றம்

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஓடிஐ தொடர் இன்று பெர்த்தில் தொடங்கியிருக்கிறது. 6 மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பிய சீனியர் வீரர்களான ரோஹித்தும் கோலியும் வ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்: "காட்டுமிராண்டித்தனமானது" - ரஷித் கான் கண்டனம்

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன.இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிற... மேலும் பார்க்க