தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
பண்ணைக்காடு அருகே சாலை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை
கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் சாலையோரப் பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் அரசு மருத்துவமனை, கிளை நூலகம் செல்லும் சாலையில் கால்வாய் அமைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பள்ளத்தை மூடுவதற்கும், சேதமடைந்த இந்தச் சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதேபோல, கொடைக்கானல் பேருந்து நிலையம் எதிரேயுள்ள கால்வாய் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.