செய்திகள் :

"பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளுக்கும் பவாரியா கும்பலுக்கும் தொடர்பா?" - ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

post image

சேலத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது, "தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை உட்கோட்ட காவல்நிலையங்களில் கைது எண்ணிக்கை, கண்டுபிடிக்காமல் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம்.

இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், சேலம் ஊரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்ய இருக்கிறோம்.

Police
Police

குற்றம் அதிகமாக நடக்கும் பகுதிகள், குற்றம் குறைவாக நடக்கும் பகுதிகள், குற்றத்திற்கான காரணம் என ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆய்வு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பெரும்பாலும் நிலம் தொடர்பான வழக்கு, அடிதடி, விபத்து வழக்குகள் அதிகமாக வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாதம் 150-160 கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது மாதம் 70 கொலைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.

அந்தளவிற்கு மாவட்ட எஸ்.பி., மாநகர ஆணையர், டி.ஐ.ஜி., மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும், "கொலைகளைப் பொறுத்தவரை தென்மண்டலம் முதலிடத்திலும், மேற்கு மண்டலம் 2வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பண்ணைத் தோட்டங்களில் 26 கொலைகள் நடந்துள்ளன.

பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளுக்கு வடமாநில பவாரியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து கொலைகளும் வெவ்வேறு காரணத்திற்காக நிகழ்ந்தன.

police
police

இதற்கும் பவாரியா கும்பலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில், தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா, வார்னிங் சிஸ்டம் வைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை ஜியோ-டேக் மூலம் பதிவு செய்து, கேமரா எங்கு உள்ளது, எந்த நிலையில் உள்ளது என்பது குறித்துக் கண்காணிக்கப்படுகிறது" என்றார்.

"போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்குத் துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலிருந்து வரும் நபர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறோம்.

போதைப்பொருள் பயன்பாடு என்பது சமுதாய பிரச்னை உள்ளது. இதனைப் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குறைக்கலாம். போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க உளவுத்துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம்.

பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குற்றம் அதிகளவில் நடக்கும் ஹாட்ஸ்பாட் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் பதிவேடுகளின் அடிப்படையில் விரைந்து தண்டனை பெற்றுத்தரச் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரவுடிகள் கொலைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனை இன்னும் குறைக்க ஊரக உட்கோட்டப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளோம்.

பொது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மதுரை: பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை; சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகக் காதல் கணவர் மீது புகார்

காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்ப... மேலும் பார்க்க

நெல்லை: காங். தலைவர் ஜெயகுமார் மரண வழக்கு; 400 நாள்களைக் கடந்து நீடிக்கும் மர்மம்; திணறும் போலீஸார்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி வீட்டை வி... மேலும் பார்க்க

வேலூர்: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிவண்ணன் (வயது 49). கடந்த 2019-ம் ஆண்டு, 20 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீட்டில் தனியாக... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”உன்னால் எங்க நிம்மதி போச்சு” - போதையில் தகராறு செய்த கணவன்; கத்தியால் குத்தி கொன்ற மனைவி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). இரவது மனைவி சிந்தனை செல்வி (25).இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வ... மேலும் பார்க்க

ஆப்பிரிக்கா டு மும்பை; வயிற்றில் கடத்திவரப்பட்ட aரூ.10 கோடி கொக்கைன்... சோதனையில் சிக்கிய நபர்!

மும்பைக்கு வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. வயிற்றில் போதைப்பொருளை எடுத்து வரும்போது அது தொடர்பாக முன்கூட்டியே விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி... மேலும் பார்க்க

மும்பை: குப்பைத் தொட்டி அருகே மீட்கப்பட்ட மூதாட்டி; விட்டுச் சென்ற பேரன் குறித்து போலீஸ் விசாரணை!

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் குப்பை தொட்டி அருகில் வயதான மூதாட்டி ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது 60 முதல் 70 வயது... மேலும் பார்க்க