பண்ருட்டி அருகே செப்பு நாணயம் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 5-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது: பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது ஆற்றின் கரையில் இரண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்ததில், விஜயநகர காலத்திய நாணயம் என்பதும், இரண்டாம் தேவராய மன்னரின் படைத் தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த ‘லக்ண தண்ட நாயக்கா்’ என்பவரின் நாணயம் ஆகும்.
இரண்டாம் தேவராயரின் அனுமதியுடன் தனது பெயரில் நாணயங்களை அவா் வெளியிட்டுள்ளாா். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோல உள்ளது. யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்று உள்ளது. பின்பக்கத்தில் மூன்று வரிகள் கன்னட எழுத்தில் ‘கன தனய காரு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் உள்ள நாணய ஆய்வாளா் பாலாஜி ரவிராஜன் படித்து கூறினாா் என்றாா் அவா்.